சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 2921 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன; 322 திட்டங்களில் 12,413 கி.மீ டெண்டர் வழங்கப்பட்டுள்ளது

Posted On: 11 OCT 2020 9:39AM by PIB Chennai

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 322 திட்டங்களில் 12,413 கி.மீ நீளமுள்ள திட்டங்கள் 2020 ஆகஸ்ட் மாதம் வரை டெண்டர் விடப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை அதே தேதியில் , 2921 கி.மீ  கட்டப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகளின் சாலைகள் குறித்த முழுமையான ஆய்வை மேற்கொண்டது. தோராயமாக மதிப்பிட்டப்பட்ட ரூ.5,35,000 கோடி ரூபாய் செலவில் (எஞ்சிய 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சி திட்ட சாலைகள்  உட்பட) 34,800 கி.மீ- அபிவிருத்தி செய்வதற்கு பாரத்மாலா பரியோஜனா 1வது கட்ட திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த முதலீட்டு அனுமதி கொடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663471

------- 



(Release ID: 1663516) Visitor Counter : 178