நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2020-21-இன் போது குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2020 6:33PM by PIB Chennai

2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கரிப் பருவத்துக்கான கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது.

முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விளைப்பொருட்களை விவசாயிகளிடம் இருந்து அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது.

நெல் கொள்முதலை பொருத்தவரையில், 2020 அக்டோபர் 9 வரை 2.83 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ரூபாய் 6065.09 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையில் 32,12,439 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 30. 70 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம் கர்நாடகா தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663414

------ 


(வெளியீட்டு அடையாள எண்: 1663438) வருகையாளர் எண்ணிக்கை : 197
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Bengali , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri