பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

23 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இது வரை வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டுள்ளன

Posted On: 10 OCT 2020 5:28PM by PIB Chennai

இது வரை 23 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டுள்ளன என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

மத்திய அரசின் B பிரிவு (அரசிதழ் சாராத) மற்றும் C பிரிவு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறை 2016 முதல் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை செயல்படுத்தி உள்ள சில முக்கிய சீர்திருத்தங்களை பற்றி பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2015 சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் 

திரு நரேந்திர மோடி, பணியாளர்களின் தேர்வை முழுக்க முழுக்க எழுத்து தேர்வின் அடிப்படையில் நடத்துவது குறித்து ஆலோசனை தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.

 

ஏனென்றால், நேர்முகத் தேர்வு குறித்த அழைப்பு விண்ணப்பதாரர் ஒருவருக்கு வந்தவுடன் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் அழுத்தத்துக்கும், கவலைக்கும் உள்ளாகிறது.

பிரதமரின் அறிவுரையை தொடர்ந்து வேகமாக செயல்பட்ட பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை, மூன்றே மாதங்களில் ஒட்டுமொத்த செயல்முறையையும் முடித்து, மத்திய அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வை 2016 ஜனவரி 1 அன்று முதல் ரத்து செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663388

---- 



(Release ID: 1663407) Visitor Counter : 144