உள்துறை அமைச்சகம்
மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான் வீட்டுக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அஞ்சலி
प्रविष्टि तिथि:
09 OCT 2020 2:39PM by PIB Chennai
தில்லியில் உள்ள மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம்விலாஸ் பஸ்வான் வீட்டுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின், டிவிட்டரில் திரு. அமித்ஷா விடுத்துள்ள செய்தியில், ‘‘நமது மூத்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஞ்சலி செலுத்தினேன். சிறந்த நடத்தைக்காகவும், மக்கள் நலப் பணிக்காகவும், பஸ்வான் எப்போதும் நினைவு கூறப்படுவார். அவருக்கு கடவுளின் கருணை எப்போதும் இருக்கும், இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பம் பெறட்டும்,’’ என குறிப்பிட்டுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1663190)
आगंतुक पटल : 152