மத்திய அமைச்சரவை

கொல்கத்தா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கொல்கத்தா கிழக்கு மேற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

12 ரயில் நிலையங்களைக் கொண்ட இந்த ரயில் பாதையின் மொத்த தூரம் 16.6 கிலோமீட்டர்

யில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்

இந்தத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும்; நகர்ப்புற தொடர்பு மேம்படுத்தப்படும்; லட்சக்கணக்கான பயணிகளுக்கு சுகாதாரமான போக்குவரத்து கிடைக்கும்

8575 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Posted On: 07 OCT 2020 4:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மாற்று வழியில் மேற்கொள்ளப்படவுள்ள கொல்கத்தா கிழக்கு-மேற்கு ரயில் பாதை பணிக்கான தொகையை உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வியூகங்களும் இலக்குகளும்:

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மொத்தம் 8575 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3268.27 கோடி ரூபாயை ரயில்வே அமைச்சகமும், 1148.31 கோடி ரூபாயை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனமான ஜேசிஐஏ-யின் கடன் தொகையான 4558.40 கோடி ரூபாயும் அடங்கும்.

• 5.3 கிலோ மீட்டர் தூர உயர்த்தப்பட்ட ரயில் பாதை, இந்த வருடம் பிப்ரவரி 14-ஆம் தேதி, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

மேலும் 1.67 கிலோமீட்டர் வரையிலான ரயில் பாதையில் இந்த மாதம் 5-ஆம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

• 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பெரும் மாற்றங்கள்:

வர்த்தக மாவட்டமான கொல்கத்தாவின் மேற்கே உள்ள தொழில் நகரமான ஹவுராவில் இருந்து கிழக்கே உள்ள சால்ட் லேக் நகரம் வரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் பயணம் செய்ய இந்தத் திட்டம் ஏதுவாக இருக்கும். மேலும் இந்த ரயில் பாதைத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், ஏராளமான மக்கள் சுகாதாரமான முறையில் பயணிக்க முடியும்இந்த ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், கொல்கத்தாவில் குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தரமான போக்குவரத்து நடைமுறைக்கு வரும். மேலும் இந்தத் திட்டத்தால் கொல்கத்தாவின் போக்குவரத்து பிரச்சினைகள் பெருமளவு தீர்க்கப்படுவதுடன், பயண நேரம் குறைவதால், நகரத்தின் உற்பத்தி பெருகும்.

மெட்ரோ ரயில் புறநகர் ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்தை ஒன்றிணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சுமூகமான மற்றும் தடையில்லா போக்குவரத்து சேவை வழங்கப்படும்.

திட்டத்தின் பயன்கள்:

மாசற்ற, சுகாதாரமான மற்றும் தரமான போக்குவரத்து வசதியை பயணிகள் பெறுவார்கள்.

பயண நேரம் குறையும்.

எரிபொருளின் பயன்பாடு குறையும்.

சாலை உள்கட்டமைப்பு செலவுகள் குறையும்

விபத்துகளும் மாசும் குறையும்

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

       • ஆத்ம நிர்பார் பாரத், உள்ளூர் மயமாக்கல்  திட்டங்கள் இதற்கு உறுதுணையாக இருக்கும்.

 

திட்டத்தின் பின்புலம்:

கொல்கத்தா மாநகருக்கும்அதனைச் சுற்றியுள்ள இதர பகுதிகளுக்கும் கொல்கத்தா கிழக்கு மேற்கு மெட்ரோ ரயில் பாதை, மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், நகர்ப்புற தொடர்பு மேம்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகளுக்குச் சுகாதாரமான போக்குவரத்து வசதி கிடைக்கும். கொல்கத்தாவின் ஹௌரா முதல் சால்ட் லேக் வரையில் தடையில்லா ரயில் சேவை வழங்கப்படும். மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில்பாதை அமையவிருக்கிறது. இதற்காக ஹூக்ளி நதி மற்றும் ஹவுரா ரயில் நிலையங்களுக்கு அடியில் சுரங்க வழிப் பாதை தோண்டப்படும். நாட்டிலேயே முதன்முறையாக மிகப்பெரிய நதிக்கு அடியிலும், ஆழமான மெட்ரோ ரயில் நிலையமான ஹவுரா நிலையத்தின் அடியிலும் போக்குவரத்துச் சுரங்கப்பாதை தோண்டுவது நாட்டிலேயே இது தான் முதல் முறை ஆகும்

---- 

(Release Id 1662327)



(Release ID: 1662513) Visitor Counter : 144