ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இந்திய வேளாண் துறையின் வளர்ச்சிக்காக விவசாய தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்காக இஃப்கோ மற்றும் பிரசார் பாரதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 06 OCT 2020 5:38PM by PIB Chennai

புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கவும், அவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும், இஃப்கோ மற்றும் பிரசார் பாரதி ஒப்பந்தம் ஒன்றில் திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய உர கூட்டுறவு அமைப்பான இஃப்கோ என்னும் இந்திய விவசாயிகள் உரை கூட்டுறவு நிறுவனம், புதுதில்லியில் உள்ள பிருத்திவி பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரசார் பாரதி உடனான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தின் படி, வேளாண்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பற்றிய நிகழ்ச்சிகள், விவசாயிகளின் நலனுக்காக எளிய மொழி நடையில் 30 நிமிட தொடராக தூர்தர்ஷன் கிசான் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகும்.

இந்திய விவசாயிகள் உரை கூட்டுறவு நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் யு எஸ் அஸ்வதி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு கே விஜய் ராகவன், பிரசார் பாரதியின் முதன்மை செயல் அலுவலர் திரு சசி சேகர் வேம்பட்டி மற்றும் தூர்தர்ஷனின் தலைமை இயக்குநர் மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662065

----- 


(Release ID: 1662099) Visitor Counter : 240