அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைதல் வளர்ச்சிக் கழகத்தின் கவச் திட்டத்தின் கீழ் கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பல்வேறு கருவிகளை புது நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன

प्रविष्टि तिथि: 06 OCT 2020 5:13PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பல்வேறு வகையான கருவிகள் இந்தியாவில் விரைவில் கிடைக்கும். ஸ்டார்ட் அப்புகள் எனப்படும் புது நிறுவனங்கள் இவற்றை உருவாக்கி வருகின்றன.

          இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைதல் வளர்ச்சிக் கழகத்தின் கவச் திட்டத்தின் கீழ் கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பல்வேறு கருவிகளை புது நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

கொவிட்-19 தீர்வுகளை கண்டறிவதற்காக தேர்வு செய்யப்பட்ட 51 நிறுவனங்களில், 11 நிறுவனங்களுக்கு உற்பத்தி, பரிசோதனை கருவிகளை அதிக அளவில் விநியோகித்தல் மற்றும் மருத்துவ தீர்வுகள் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

 

பெரும்பாலான தொழில்நுட்பங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த செயல்முறை நிறைவடைந்து இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், இந்த தீர்வுகள் செயல்பாட்டுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662050

  ----- 


(रिलीज़ आईडी: 1662075) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Telugu