சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கல்வி பாடங்களை இந்திய சைகை மொழியில் மாற்றியமைக்கும் வகையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுக்கும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
06 OCT 2020 4:44PM by PIB Chennai
செவி குறைபாடு உள்ள குழந்தைகள், அவர்களுக்கு தெரிந்த சைகை மொழியிலேயே பாடங்களை பயிலும் வகையிலான ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இன்று கையெழுத்திட்டன.
காணொளி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் தாவர் சந்த் கெலாட், மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தாவர் சந்த் கெலாட், கல்வி பாடங்களை சைகை மொழியில் கற்பிப்பதின் மூலம் செவி குறைபாடு உள்ள குழந்தைகள், அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் பயன் அடைவார்கள் என்று கூறினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, என்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் புத்தகங்கள் அனைத்தும் சைகை மொழியில் கிடைக்கப்பெறும்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்', இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செவி குறைபாடு உள்ள குழந்தைகளின் கல்வி பெரும் வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662033
----
(Release ID: 1662073)
Visitor Counter : 156