தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

Posted On: 06 OCT 2020 11:59AM by PIB Chennai

திரையரங்குகளை வரும் 15ம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கான  நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை (SOP), மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் இன்று வெளியிட்டார்திரைப்படங்களை காட்டுவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய  நெறிமுறைகள் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்துடன்  ஆலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையான செயல்பாடு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவின்படி, திரையரங்குகள் வரும் 15ம் தேதி முதல் திறக்கும். அதற்காக இந்த நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும், போதிய சமூக இடைவெளி இருக்க வேண்டும், முக கவசம் பயன்படுத்த வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும், சுவாச விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்  என்பது உட்பட பொதுவான விதிமுறைகளை இந்த நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் சுட்டிக் காட்டுகின்றன. சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி, நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளதுஇருக்கைகளில் 50 % சதவீத பார்வையாளர்கள் மட்டுமே உட்காரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனதிரைப்படங்களை தொடர்ந்து காட்டாமல், அதன் நேரங்களில்  இடைவெளி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குக்குள் வெப்ப நிலை 24 டிகிரி முதல் 30 டிகிரி வரை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திரைப்படங்கள் காட்டுவது, நாட்டின் பொருளாதார நடவடிக்கையிலும், மொத்த உள் நாட்டு உற்பத்தியிலும்  முக்கிய பங்கு வகிக்கிறதுதற்போதைய கொவிட் - 19 சூழலில், திரைப்படங்களை காட்டும் அனைத்து தரப்பினரும், தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தகுந்த கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முக்கியம்.

மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த மாதம் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள திரையரங்குகளை,  50 % பார்வையாளர்களுடன் வரும் 15ம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதன் விரிவான அறிக்கையை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்:

https://mib.gov.in/sites/default/files/SOP%20for%20exhibition%20of%20films.pdf

இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘ திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்படும். சமூக இடைவெளிக்காக, பார்வையாளுருக்கு அருகில் உள்ள இருக்கை காலியாக இருக்க வேண்டும். திரையரங்குக்குள் முககவசம் கட்டாயம்: மத்திய அமைச்சர்  @PrakashJavdekar

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661973

 

***********

(Release ID: 1661973)


(Release ID: 1661990) Visitor Counter : 230