வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஐ.நா உறுப்பு நாடுகள் கடந்த 2015ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட 2030ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி கொள்கையின் வழிகாட்டு ஆவணம் - 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGS) மற்றும் 169 குறிக்கோள்கள் ஒட்டு மொத்த தொலை நோக்கு மற்றும் இலக்கை பிரதிபலிக்கிறது: திரு. ஹர்தீப் சிங் பூரி.

Posted On: 05 OCT 2020 1:05PM by PIB Chennai

உலக வாழ்விட நாள் 2020  

உலக வாழ்விட நாள் 2020-ஐ முன்னிட்டு, தில்லி நிர்மன் பவனில் நடந்த காணொலி காட்சி நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பேசினார்.   அப்போது

அவர் பேசுகையில், ‘‘ஐ.நா உறுப்பு நாடுகள் கடந்த 2015ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட 2030ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி கொள்கை, இந்த உலகம் மற்றும் அதில் வாழும் மக்களுக்கான வழிகாட்டு ஆவணம். இதில் உள்ள  17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGS) மற்றும்  169 குறிக்கோள்கள்ஒட்டு மொத்த தொலை நோக்கு மற்றும் இலக்கை பிரதிபலிக்கின்றன. இவற்றை நாம் 2030ம் ஆண்டுக்குள் சாதிக்க  நாம் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.   ஐ.நா உறுப்பு நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை பின்பற்றும் முன்பேநகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம்பிரதமரின் வீட்டு வசதி திட்டம்ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் திட்டம் போன்ற அனைத்து முதன்மை திட்டங்கள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டன. இந்தியா போன்ற பன்முகத்தன்மை மற்றும் அதிக மக்கள் தொகை உடைய பெரிய நாட்டில், இது போன்ற லட்சிய நகர்ப்புற திட்டங்களை அமல்படுத்துவதுமிகப் பெரிய சவால்.  ‘‘ இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த வெற்றிக்கு வலுவான அரசியல் விருப்பம் தேவை. அது இந்த அரசில் அதிகம் உள்ளது’’ என அமைச்சர்  திரு.ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை  செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஷ்ரா மற்றும் மூத்த அதிகாரிகள், ஐ.நா அமைப்புகள், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறையின் கீழ் உள்ள ஹட்கோபிஎம்டிபிசி, சிஜிஇடபிள்யூஎச்ஓ போன்ற  அமைப்புகளின்  இ-வெளியீடுகளும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

   இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘‘தொழிலாளர்கள் அதிகளவில் இடம் பெயர்வது  மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும், இப்பிரச்னைக்கு தீர்வு காண வாடகை வீட்டு வசதி திட்டத்தை மிகப் பெரிய அளவில், மத்திய அரசு உடனடியாக கொண்டுவந்துள்ளது’’ என கூறினார்.   இந்த பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் புதிய மற்றும் சுற்றுச்  சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். 

நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் சாதனைகள் குறித்து விவரித்த திரு.ஹர்திப் சிங் பூரி, ‘‘ தனிநபர் மற்றும் சமுதாய கழிப்பறை கட்டும் பணிகள்  இலக்கு எண்ணிக்கையை தாண்டி  கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதிக்குள் முடிக்கப்பட்டன’’ என்றார்.  இது உண்மையிலேயே மகாத்மா காந்திக்கு யாரும் செய்ய முடியாத மிகப் பெரிய புகழஞ்சலி எனவும், இது மக்கள் இயக்கமாக மாறியது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் மக்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரித்து குற்ற எண்ணிக்கைகள் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் திரு. ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661704

*******

(Release ID: 1661704)



(Release ID: 1661751) Visitor Counter : 159