வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்துஸ்தான் வர்த்தக சபையின் 74வது ஆண்டு கூட்டத்தில் திரு.பியூஷ் கோயல் உரையாற்றினார்.

Posted On: 03 OCT 2020 7:48PM by PIB Chennai

 •       மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை & ரயில்வேத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் காணொளி காட்சி மூலம் இந்துஸ்தான் வர்த்தக சபையின் 74 வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றினார். இந்துஸ்தான் வர்த்தக சபை என்று அழைக்கப்படும் இந்த ஆண்டு கூட்டம், வர்த்தக சபை மற்றும் தொழில்நுட்ப முக்கியத்துவத்தில் பங்கேற்பதில் கவனம் செலுத்துவது, இந்த பெருந்தொற்று காலத்தில் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயல்படுவது மிகவும் பொருத்தமான பொருளாக இருப்பதாக கூறினார். ஒவ்வொரு நாள் கடக்கும்போதும், வர்த்தக சபையின் பங்கு மட்டும் மேலும், மேலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. வர்த்தக சபை எடுத்துள்ள முயற்சிகள் காரணமாக, நல்ல விளைவுகளை உருவாக்க முடியும் என்பது தெளிவாக வெளிப்படுகிறது. அரசின் அக்கறை உள்ள பகுதிகளை முன்னிலைப்படுத்துவதில் வர்த்தக சபை முக்கிய பங்களிப்பை செய்து வருகிறது. கள அளவிலான பிரச்னைகள். வணிகத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கான புதுமையான தீர்வுகளுடனும், தவிர கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான புனித த்தன்மையை நிர்வகிக்கும் வகையிலும் வந்திருக்கிறதுஎன்றும் அவர் தெரிவித்தார். திரு. கோயல் மேலும் கூறுகையில், நமது வணிகத்தை மறு பரிசீலனை செய்வதற்கும் மற்றும் மறு வடிவமைப்பு செய்வதற்கும், அரசின் பணிகளை மறுவடிவமைப்பு செய்வதற்கும் மற்றும் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு முறைகள் மற்றும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றுவதற்கும் நாம் இணைந்து பணியாற்றுவோம்.   73 ஆண்டுகளின் சுதந்திரத்தின் பலன்களை இழந்து நிற்பவர்கள் அல்லது நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் சமூகத்தின் நடுத்தரப்பிரிவினருக்காக வணிகமும் அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும். அடித்தளத்தில் இருக்கும் மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்காக நாம் இணைந்து பணியாற்றுவோம். நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருப்பதால், அரசு மற்றும் வணிகத்தை விரைவாக முன்னேற்ற முடியும். 1.3 பில்லியன் இந்தியர்களின் நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் நமது தரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவோம்,” என்று உறுதி அளித்தார்.

பொருளாதார மறுமலர்ச்சி பற்றி கூறும்போது, “மோசமான காலகட்டம் முடிந்து விட்டதாக பல்வேறு தரவுகள் உணர்த்துகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆடைகள் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ரயில்வே துறை சரக்குப் போக்குவரத்தில் 15 சதவிகிதம் அதிக சரக்குகளை கையாண்டுள்ளது. இந்தியா மீண்டும் ஒரு முறை உயர் வளர்ச்சியை நோக்கி மீண்டும் பாய்ச்சலைத் தொடங்கியிருக்கிறது என்று குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதுதான் நமது சொத்தாகும்,” என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661390

****************



(Release ID: 1661584) Visitor Counter : 156