குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கொவிட்-19 அச்சத்துக்கிடையிலும் காதி இந்தியாவின் தில்லி விற்பனையகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ரு 1.02 கோடிக்கு விற்பனை
Posted On:
04 OCT 2020 1:02PM by PIB Chennai
கொவிட்-19 அச்சத்தை காதி பொருட்களை நேசிப்பவர்களின் உணர்வு மிஞ்சியது என்று கூறும் அளவுக்கு, காதி இந்தியாவின் தில்லி விற்பனையகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ரு 1.02 கோடிக்கு விற்பனை ஆனது.
தில்லி கண்ணாட் பிளேசில் உள்ள காதி இந்தியாவின் முன்னணி விற்பனையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (2020 அக்டோபர் 2) அன்று ரு 1,02,19,496-க்கு விற்பனை ஆனது.
தற்போதைய கொரோனா சூழ்நிலையில் இது குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அதிகமான விற்பனை ஆகும். கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று இந்த மையத்தின் விற்பனை ரு 1.27 கோடி ஆகும்.
2020 அக்டோபர் 2 அன்று காலை முதல் மாலை வரை 1633 விற்பனைகள் கண்ணாட் பிளேசில் உள்ள காதி இந்தியாவின் முன்னணி விற்பனையகத்தில் நடந்த நிலையில், ஒரு விற்பனையின் சராசரி அளவு ரூ 6,258 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661516
****************
(Release ID: 1661536)
Visitor Counter : 211