கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய கப்பல் கழகத்தின் வைர விழா கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.
प्रविष्टि तिथि:
02 OCT 2020 6:29PM by PIB Chennai
இந்திய கப்பல் கழகத்தின் வைர விழா கொண்டாட்டத்தை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.
இந்திய கப்பல் கழகத்தின் வைர விழாவை முன்னிட்டு ஊழியர் ஒருவர் உருவாக்கிய லோகோவையும் அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, ‘‘ இந்திய கப்பல் கழகம், 59 ஆண்டுகளை நிறைவு செய்து, 60-வது ஆண்டில் நுழைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்திய கப்பல் கழகத்தின் நிதி நிலையை பாராட்டிய மத்திய அமைச்சர், இந்திய கப்பல் கழகத்தின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி என பாராட்டினார். காந்தி ஜெயந்தி நாளில், நிறுவன நாளை கொண்டாடும் இந்திய கப்பல் கழகம், காந்திஜி வலியறுத்திய தற்சார்பு இந்தியாவை நோக்கிய செல்ல வேண்டும் என கூறினார். வரும் ஆண்டுகளில் இந்திய கப்பல் கழகமும், அதன் ஊழியர்களும், மிக உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா வாழ்த்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661063
****************
(रिलीज़ आईडी: 1661127)
आगंतुक पटल : 252