குடியரசுத் தலைவர் செயலகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் செய்தி
Posted On:
01 OCT 2020 4:41PM by PIB Chennai
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கீழ்கண்ட செய்தியை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டுக்கு அளித்துள்ளார்.
"நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தில், இந்த நன்றியுள்ள நாட்டின் சார்பாக நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்," என்று தனது செய்தியில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் மகாத்மா காந்தி நினைவு கூறப்படுகிறார் என்று திரு கோவிந்த் கூறியுள்ளார்.
மனிதநேயத்தின் அடையாளமாக காந்தியடிகள் திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ள குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரத்தையும் ஊக்கம் அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660655
****************
(Release ID: 1660715)
Visitor Counter : 201