பாதுகாப்பு அமைச்சகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் பொருத்தப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

Posted On: 30 SEP 2020 2:28PM by PIB Chennai

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு உபகரணங்களைக் கொண்டு தயாரான பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர், பறக்கும் பிரிவு போன்ற பல்வேறு உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய நவீன ஏவுகணை, ஒடிஷாவின் பாலாசூரில் உள்ள சோதனை தளத்திலிருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது.

 

உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள இந்த சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, அறிவியல் சமூகத்தையும், தொழில்களையும் இந்த சாதனைக்காக பாராட்டினார். தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு வலுவூட்டும் வகையில் இன்றைய வெற்றி அமைந்துள்ளது

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660288

 

(Release ID: 1660288)


(Release ID: 1660541)