ஆயுஷ்

ஆயுஷ் பிரிவுகளில் ஆராய்ச்சி கலாச்சாரத்துக்கு கொவிட்-19 நெருக்கடி ஊக்கமளிக்கிறது

Posted On: 30 SEP 2020 12:23PM by PIB Chennai

ஆயுஷ் துறைகளில் ஆரோக்கிய-ஊக்கமளிப்பு மற்றும் நோய்த் தடுப்பின் மீது கொவிட்-19 பெருந்தொற்று கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆதாரம் சார்ந்த ஆய்வுகளின் மீது நாடு முழுவதும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

கொவிட்-19 பரிசோதனைகளில் ஆயுர்வேத இடையீடுகள் தொடர்பாக இந்தியாவின் மருத்துவ பரிசோதனை பதிவேட்டை ஆய்வு செய்து 2020 மார்ச் 1 முதல் 2020 ஜூன் 25 வரை ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஆயுர்வேத சிசிச்சைக்காக செய்யப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை 58 ஆகும்.

இந்தியாவின் மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் செய்யப்பட்டுள்ள 203 பதிவுகளில் 61.5 சதவீதம் ஆயுஷ் பிரிவுகள் சார்ந்ததாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

'ஜர்னல் ஆப் ரிசர்ச் இன் ஆயுர்வேதிக் சயின்சஸ்' என்னும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆயுர்வேத ஆய்வுகள் பற்றிய கட்டுரையில் ஆயுஷ் பிரிவுகளில் அதிகரித்து வரும் ஆராய்ச்சி கலாச்சாரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் ஆய்வுகள் அதிகரித்து வரும் காரணத்தால், நவீன காலத்துக்கு ஏற்றவாறு ஆயுஷ் பிரிவுகளின் ஞானம் பிரதிபலிக்கிறது. நாட்டின் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு இந்த ஆராய்ச்சிகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660259

 

******


(Release ID: 1660342) Visitor Counter : 182