தேர்தல் ஆணையம்
ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் நாடு முழுவதும் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு
प्रविष्टि तिथि:
29 SEP 2020 3:38PM by PIB Chennai
பிகாரில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும், நாடு முழுவதும் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதிகள் சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ஒடிஷா, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.
உள்ளூர் திருவிழாக்கள், வானிலை நிலவரங்கள், பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து மற்றும் பெருந்தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான அட்டவணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகள் உள்ள மாவட்டங்களில் தேர்தல் விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடைமுறைகளின் போது கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660023
********
(रिलीज़ आईडी: 1660069)
आगंतुक पटल : 192