சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய மருத்துவ ஆய்வுக்கழகத்தின் வரலாற்று காலச்சுவடை டாக்டர் ஹர்ஷ்வர்தன் திறந்துவைத்தார்

Posted On: 28 SEP 2020 5:15PM by PIB Chennai

மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் இன்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்குச் சென்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கும் காலச்சுவடு ஒன்றைத் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) நடமாடும் பக்கவாத சிகிச்சை அலகு ஒன்றையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தால் தொடங்கப்படவுள்ள தடுப்பு மருந்து மற்றும் மருத்துவ பரிசோதனைப் பதிவு இணையதளம் ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICMR-NIN) இயக்குர் டாக்டர். ஆர் ஹேமலதா, இதர மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இந்தியாவின் மிக முதன்மையான ஆராய்ச்சிக் கழகமான ஐ சி எம் ஆர் நிறுவப்பட்ட 1911ஆம் ஆண்டு முதல் 108 ஆண்டு கால வரலாற்றின் சாதனைச் சுவடு காட்சியை டாக்டர்.ஹர்ஷ்வர்தன் துவக்கி வைத்தார். தாய் சேய் நலம், எச் ஐ வி, புற்றுநோய், ஊட்டச்சத்து உட்பட பல்வேறு துறைகளில் ஐ சி எம் ஆர், அதன் பல்வேறு அமைப்புகள், மேற்கொண்ட மிகச்சிறந்த பணிகள் குறித்தும், பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த அவை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், அவற்றின் கொள்கைகள் பல்வேறு செயல் திட்டங்கள் குறித்தும் காலச்சுவடில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

 

 



(Release ID: 1659897) Visitor Counter : 175