ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: இப்கோ
Posted On:
28 SEP 2020 4:07PM by PIB Chennai
டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்று இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள இப்கோ நிர்வாக இயக்குநர் திரு. யு. எஸ். அவஸ்தி, மூலப் பொருள்களின் விலைகள் சர்வதேச சந்தைகளில் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
"பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா அறைகூவலைச் சார்ந்து விவசாயிகளின் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைப்பது எங்களின் லட்சியமாக உள்ளதால், உரங்களின் விலைகளை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை. விவசாயிகளின் வருமானத்தை 2020-க்குள் இரட்டிப்பாக்குவதும் பிரதமரின் லட்சியமாகும்," என்று அவர் கூறியுள்ளார்.
உரங்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள முன்னணி கூட்டுறவு நிறுவனமான இப்கோவுக்கு நாட்டில் ஐந்து உரத் தொழிற்சாலைகள் உள்ளன.
***
(Release ID: 1659881)