சுற்றுலா அமைச்சகம்
ஊரக சுற்றுலா குறித்த இணையக் கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது
प्रविष्टि तिथि:
28 SEP 2020 3:41PM by PIB Chennai
நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் ஊரகச் சுற்றுலா குறித்த இணையக் கருத்தரங்கு ஒன்றை மத்திய சுற்றுலா அமைச்சகம் 2020 செப்டம்பர் 26 அன்று நடத்தியது.
கிராமங்கள், மக்கள், விவசாயம், கலாச்சாரம், நிலைத்தன்மை, பொறுப்புணர்ச்சி மற்றும் சமூக வாழ்வு ஆகியவற்றின் சிந்தனைகள் குறித்து இந்த இணையக் கருத்தரங்கம் கவனம் செலுத்தியது.
கிரீன் பீப்பிள், தி கோட் வில்லேஜ் & பாக்ரி சாப் நிறுவனர் திரு ரூபேஷ் ராய், இமயமலைப் பயணியான 23 வயதுடைய மணி மகேஷ் அரோரா, உபசரிப்புத் துறைப் பணியாளர் திருமிகு சுனிதா குட்லே ஆகியோர் இந்தக் கருத்தரங்கை வழங்கினர்.
நிறைவுரை ஆற்றிய கூடுதல் தலைமை இயக்குநர் திருமிகு ரூபிந்தர் பிரார், தற்போதைய விதிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்து ஒட்டுமொத்த மனித குலமும் இயற்கையுடன் இணைந்து வாழலாம் என்று தெரிவித்தார்.
***
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659743
(रिलीज़ आईडी: 1659833)
आगंतुक पटल : 226