சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 சமீபத்திய தகவல்கள்:புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளில் 75% 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளன மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது

Posted On: 26 SEP 2020 1:00PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில், 85,362 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளில் 75 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளன.

பாதிப்புகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 17,000-க்கும் அதிகமான பாதிப்புகள் அம்மாநிலத்தில் இருந்து மட்டுமே பதிவாகி உள்ளது.

கர்நாடகாவில் எட்டாயிரத்திற்கும் அதிகமான புதிய பாதிப்புகளும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழாயிரத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகளும் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 1,089 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 83 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1659270


(Release ID: 1659384)