ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

திரவ மருத்துவ பிராணவாயுவின் விலையை குறைக்க தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் களத்தில் இறங்கியது

Posted On: 26 SEP 2020 12:31PM by PIB Chennai

தற்போதைய கொவிட்-19 நிலைமையின் காரணமாக மருத்துவ பிராணவாயுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், அது தங்குதடையில்லாமல் கிடைப்பது மிகவும் அவசியமாகிறது.

பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மருத்துவ பிராணவாயுவின் விநியோகத்துக்காக மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை நம்பியுள்ளன.

ஒரு நாளைக்கு 750 மெட்ரிக் டன்களாக இருந்த மருத்துவ பிராணவாயுவின் தேவை, தற்போது நான்கு மடங்காக, அதாவது ஒரு நாளைக்கு 2800 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது.

2020 செப்டம்பர் 23 தேதியிட்ட கடிதத்தின் மூலம், திரவ மருத்துவ பிராணவாயு மற்றும் பிராணாவாயு உருளைகள் தாராளமாக கிடைத்தல் மற்றும் அவற்றின் விலைக் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யுமாறு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து, 2020 செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற அசாதாரண கூட்டத்தில், பொது நலனை கருத்தில் கண்டு, திரவ பிராணவாயுவின் விலையை (உற்பத்தியாளர் முனையில்) ஒரு கியுபிக் மீட்டருக்கு ரூ 15.22 (சரக்கு மற்றும் சேவை வரி சேர்க்காமல்) என்றும் மருத்துவ பிராணவாயு உருளையின் விலையை ஒரு கியுபிக் மீட்டருக்கு ரூ 25.71 (சரக்கு மற்றும் சேவை வரி சேர்க்காமல்) என்றும் அதிகபட்சமாக நிர்ணயிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659266


(Release ID: 1659378) Visitor Counter : 260