சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து முன்னேற்றம்: 47.5 லட்சத்தை கடந்தது

Posted On: 25 SEP 2020 4:16PM by PIB Chennai

நாட்டின்  தினசரி கொவிட் பரிசோதனை  சுமார் 15 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது.

இதுவரை மொத்தம் 47.5 லட்சத்துக்கும் (47, 56, 164) மேற்பட்ட கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 81,177 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 

சிகிச்சை பெறுபவர்களை விட (9,70,116) குணமடைந்தவர்கள் (37,86,048) சுமார் 38 லட்சம் பேர் இன்று அதிகம் உள்ளனர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில், 73% பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, தில்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், 1,141 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 83% பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659012



(Release ID: 1659090) Visitor Counter : 151