நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020 நிறைவுற்றது

Posted On: 24 SEP 2020 2:06PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020- பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது  மக்களவையின் செயல்திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும், மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2020 செப்டம்பர் 14 அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020, 2020 அக்டோபர் 1 அன்று நிறைவடைய இருந்ததாகவும், ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றால் 10 நாட்களில், 2020 செப்டம்பர் 23 அன்றே மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தொடரின் போது 22 மசோதாக்கள் (மக்களவையில் 16 மற்றும் மாநிலங்களவையில் 6) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின. இரு அவைகளும் 27 மசோதக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இது வரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன.

 

இடைப்பட்ட கூட்டத்தொடரின் பிரகடனப்படுத்தப்பட்ட 11 அவசர சட்டங்கள், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-ல் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658625

-----



(Release ID: 1658668) Visitor Counter : 225