தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரின் பத்திரிகை செய்தி

प्रविष्टि तिथि: 24 SEP 2020 2:03PM by PIB Chennai

கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவிருந்த, 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2021 ஜனவரி 16ம் தேதி முதல்  24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா முதல்வர்  டாக்டர் பிரமோத் சவாந்த்துடன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர்  இது தொடர்பாக ஆலோசனை நடத்தியப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது

சர்வதேச திரைப்பட விழா வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் படிஇந்த திரைப்பட விழாவை கோவாவில், 2021 ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை  நடத்த இருவரும் கூட்டாக முடிவு செய்தனர். இந்த விழா மெய்நிகர் மற்றும் நேரடியான நிகழ்ச்சியாக நடத்தப்படும்சர்வதேச திரைப்பட விழா வட்டாரத்தில் சமீபத்தில் நடந்த விழாக்களில் பின்பற்றியபடிகொவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்படும்.

-----

 


(रिलीज़ आईडी: 1658650) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Urdu , Kannada , Bengali , Gujarati , English , हिन्दी , Manipuri , Punjabi , Telugu , Malayalam