உள்துறை அமைச்சகம்
மறைந்த ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், தில்லியில் உள்ள அரசு கட்டிடங்களில் செப்டம்பர் 24ம் தேதி (இன்று) தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும்.
प्रविष्टि तिथि:
24 SEP 2020 10:56AM by PIB Chennai
ரயில்வே இணையமைச்சர் திரு. சுரேஷ் சி.அங்கடி, புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியில் பல்கலைக்கழகத்தில் (எய்ம்ஸ்) செப்டம்பர் 23ம் தேதி மரணம் அடைந்ததை மத்திய அரசு ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தில்லியில் வழக்கமாக தேசியக் கொடி பறக்கும் கட்டிடங்களில், தேசியக் கொடி செப்டம்பர் 24ம் தேதி(இன்று) அரைக்கம்பத்தில் பறக்கும். மேலும், இறுதிசடங்கு நடைபெறும் இடத்திலும் அன்றைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.
இறுதி சடங்கு நடைபெறும், நாள், நேரம், இடம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும்.
------
(रिलीज़ आईडी: 1658583)
आगंतुक पटल : 147