நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. தான்வே ராவ்சாஹிப் தாதாராவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
Posted On:
23 SEP 2020 1:31PM by PIB Chennai
ஹால்மா்ரக் கட்டயாமாக்கப்பட்டதை முன்னிட்டு, இந்திய தரச் சான்றிதழ் பிரிவுக்கு (BIS) நகைக்கடைகள் மற்றும் ஹால் மார்க் மையங்கள் விண்ணப்பிப்பது பல மடங்கு அதிகரிக்கும். இதற்காக பிஸ் தரச்சான்றிதழ் வழங்க ஆன்லைன் முறையை மத்திய அரசு கடந்த 21.08.2020-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் பிஸ் தரச்சான்றிதழ் பெற விரும்புபவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, பதிவுக் கட்டணத்தை செலுத்தலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மனித தலையீடு இருக்காது. விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியவுடனே, பதிவு வழங்கப்படும்.
பொம்மை தயாரிப்புக்கான தர கட்டுப்பாட்டு விதிகள் 1.9.2020 முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய தொழில் வளர்ச்சித் துறை அறிவித்திருந்தது. ஆனால் பொம்பை தயாரிப்பு தொழில் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று, தர கட்டுப்பாடு அமலுக்கு வரும் தேதி 01.01.2021ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 முடக்க காலத்தில் , பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் 2020 வரை 8 மாதங்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும், ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி, குடும்பத்துக்கு மாதம் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது. பருப்புகள் வழங்குவது நுகர்வோர் விவகார துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரினர் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் முதல் கட்டத்தில், மொத்த ஒதுக்கீட்டில் 5,48,172.44 மெட்ரிக் டன் பருப்புகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 18.27 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 2வது கட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும், உணவுப் பொருட்கள்/பருப்புகள் வழங்கப்பட்டன. இவர்கள் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றம் பொது விநியோக திட்டத்தின் கீழ் வராதவர்கள். புலம் பெயர் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை நுகர்வோர் துறையிடம் இல்லாததால், தாராள மதிப்பீடு செய்து 8 கோடி பேருக்கு 2 மாதங்களாக 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் முதல் கட்டத்தில், நுகர்வோர் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த மார்ச் 30ம் தேதி 121 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியம் ஒதுக்கீடு செய்தது. இரண்டாவது கட்டத்தில் 201 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியம் ஒதுக்கீடு செய்தது.
(Release ID: 1658325)
Visitor Counter : 287