மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஐஐடி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
प्रविष्टि तिथि:
22 SEP 2020 3:21PM by PIB Chennai
ஐஐடி சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 20ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சூரத், போபால், பகல்பூர், அகர்தாலா மற்றும் ரெய்ச்சூரி ஆகிய 5 இடங்களில் உள்ள ஐஐடிக்கள் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் செயல்பட முடியும் என மத்திய உயர்கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஐஐடி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக, அவருக்கு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நன்றி தெரிவித்துள்ளார்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657722
*****
(रिलीज़ आईडी: 1658033)
आगंतुक पटल : 272