தேர்தல் ஆணையம்
சில ஊடகங்களில் உண்மைக்கு மாறான செய்தி
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2020 10:22AM by PIB Chennai
தில்லியில் நேற்று செப்டம்பர் 21, 2020-ம் தேதி நடந்த சர்வதேச இணைய கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா, கூறிய கருத்துக்களை ஊடகங்கள் சில தவறாக விளக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் 21.9.2020ம் தேதி 16.30 மணிக்கு வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், ‘‘பிகார் செல்வது குறித்து தேர்தல் ஆணையம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முடிவு செய்யும் என தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டதாக’’ கூறப்பட்டுள்ளதை தயவு செய்து கவனிக்கவும்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை வைத்து, செய்திகள் வெளியிட்ட அனைத்து ஊடக அமைப்புகளும், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப் பூர்வ பத்திரிக்கை செய்தியை பார்த்து தங்கள் செய்திகளை திருத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமை தேர்தல் ஆணையர் பிகார் செல்வது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பிகார் செல்வதற்கும், ஏஎன்ஐ குறிப்பிட்டது போல் பிகார் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657585
******
(வெளியீட்டு அடையாள எண்: 1657622)
வருகையாளர் எண்ணிக்கை : 201