பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா பிவண்டியில் கட்டிடம் இடிந்ததால் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2020 10:57AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் நேரிட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “மகாராஷ்டிரா பிவண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட உயிரிழப்பை அறிந்து துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
********************
(வெளியீட்டு அடையாள எண்: 1657160)
வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam