குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பொதுமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முகக்கவசங்களை அணிந்து, சமுக இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்: வெங்கையா நாயுடு

Posted On: 19 SEP 2020 1:58PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடு, தற்போதைய பெருந்தொற்றில் இருந்து பொது மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த தன்னுடைய கவலையை இன்று மீண்டுமொருமுறை தெரிவித்தார்.

முகக்கவசங்களை அணிந்து, சமுக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுத்தத்தை பேணி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு  வலியுறுத்தினார்.

முகக்கவசம் அணிவது கொவிட்-19-இல் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான சிறந்த முறையாகும் என்று கூறிய அவர், இந்த கொள்ளை நோய் மறையும் வரை போதுமான இடைவெளியைப் பேணுவது அவசியம் என்றார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றுமாறு உறுப்பினர்களை திரு நாயுடு கேட்டுக் கொண்டார். "சத்தான உணவை உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்து, யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1656622

 

MBS/GB


(Release ID: 1656638)