சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒரே நாளில் இன்னொரு உச்சம்: கொவிட் தொற்றிலிருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்தனர்

Posted On: 18 SEP 2020 12:04PM by PIB Chennai

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில், 87,472 பேர்  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், கடந்த 11 நாட்களாக, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி குணமடைந்து வருகின்றனர்.

இதனால் குணமடைந்தோர் வீதம் மேலும் அதிகரித்து இன்று 78.86%-மாக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,12,551 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை 4.04 மடங்கு அதிகமாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தோர் 30,94,797 பேர் அதிகம் உள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் உள்ள 5 மாநிலங்களில்தான், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தில், சிகிச்சை பெறுபவர்களில் 59.8% பேர் உள்ளனர். இங்குதான் குணமடைந்தவர்களில் 59.3 சதவீதம் பேரும் உள்ளனர்.

புதிதாக குணம் அடைந்தவர்களில் 90% பேர், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்கள் படி தீவிர சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுவதால், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை, எய்ம்ஸ் உடன் இணைந்து, தேசிய அளவில் ஐசியு மற்றும் கொவிட்-19 மேலாண்மை குறித்து  காணொலி காட்சி மூலம் பயிற்சி,   வாரம் இரு முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அளித்து வருகிறது.  இந்த நடைமுறை குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பதிலும், இறப்பு விகிதம் குறைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாடுமுழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 249 மருத்துவமனைகளில் 19 இ- ஐசியு  பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட் சிகிச்சையில் ரெம்டெசிவர், பிளாஸ்மா, சிகிச்சை, அதிக அளவு ஆக்ஸிஜன், ஸ்டிராய்டு மருந்து செலுத்துதல் போன்ற நடைமுறைகளையும் மருத்துவமனைகள் பின்பற்ற இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன்  போதிய அளவில் கிடைக்கிறதா என தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக, குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது, உயிரிழப்போர் வீதம் 1.62%-ஆக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1656047

*******************


(Release ID: 1656113) Visitor Counter : 210