சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒரே நாளில் கொவிட்-19 தொற்றிலிருந்து 82,961 பேர் குணமடைந்தனர்
Posted On:
16 SEP 2020 11:57AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் தொடர்ந்து அதிகரிக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 82,961 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 78.53% ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 39,42,360 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (19423), ஆந்திரப் பிரதேசம் (9628), கர்நாடகம் (7406) , உத்தரப் பிரதேசம் (6680), தமிழ்நாடு (5735)ஆகிய மாநிலங்களில் இருந்து 35.5% பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுபவர்களும் இந்த மாநிலங்களில் தான் சுமார் 60% பேர் உள்ளனர்.
நாட்டில் தற்போது, 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான இடைவெளி 29 லட்சத்தை கடந்துவிட்டது. சிகிச்சை பெறுபவர்களை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
*கொவிட் தொற்று தொடர்பான, நாடு முழுவதற்குமான புள்ளிவிவரங்கள், வரைபடங்கள் மற்றும் தரவுகளை ஆங்கில செய்திக் குறிப்பில் காணலாம்.
பிற விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654884
*****
(Release ID: 1654936)
Visitor Counter : 251
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam