பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ ஒத்துழைப்பு பற்றிய மெய்நிகர் கலந்துரையாடலை இந்திய-அமெரிக்க பாதுகாப்பு குழுக்கள் நடத்தின

Posted On: 16 SEP 2020 10:38AM by PIB Chennai

பாதுகாப்பு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நடவடிக்கை குழுவின் பத்தாவது கூட்டம் மெய்நிகர் முறையில் 2020 செப்டம்பர் 15 அன்று நடந்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செயலாளர் திரு ராஜ் குமார், அமெரிக்க பாதுகாப்பு துறையின்  கொள்முதல் மற்றும் நிலைத்தன்மை துணை செயலாளர் திருமிகு எலென் எம் லார்ட் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் இந்தக் கூட்டம் கொவிட்-19 காரணத்தால் இந்த தடவை மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய இரு அதிகாரிகளும் இணைந்து ஒரு ஒப்புதல் அறிக்கையில் கையெழுத்திட்டனர். "விரிவான திட்டமிடல் மற்றும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவதன் மூலம் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை நமது பேச்சுவார்த்தையின் வாயிலாக பலப்படுத்துவோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த முறை அக்டோபர் 2019-இல் இந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் முடிவெடுத்தவாறு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து இரு அதிகாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1654856

******



(Release ID: 1654870) Visitor Counter : 161