பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளைகளுக்கான தேவை

Posted On: 14 SEP 2020 2:18PM by PIB Chennai

எட்டு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செப்டம்பர் 2019-இல் அது எட்டப்பட்டது.

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2020 வரை 1306.87 லட்சம் சமையல் எரிவாயு உருளைகளை உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எரிவாயு உருளைகளை வாங்குவதற்காக ரூ 9670.41 கோடியை பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

2019-20-இல் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் ஒரு வருடத்துக்கான 14.2 கிலோ எரிவாயு உருளைகளின் பயன்பாடு 3.01 ஆகும்.

இதைப்பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இன்று அளித்தார்.

அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653977

*******


(Release ID: 1654047) Visitor Counter : 230