ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இரு திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை பாகல்பூர் மற்றும் வாரணாசியில் சிபெட் அமைக்கவுள்ளது

प्रविष्टि तिथि: 08 SEP 2020 3:43PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) இரு திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை பாகல்பூர் (பீகார்) மற்றும் வாரணாசியில் (உத்திரப் பிரதேசம்) விரைவில் அமைக்கவுள்ளது.

 

பெட்ரோகெமிக்கல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக பட்டயம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஒவ்வொரு வருடமும் தலா 1000 இளைஞர்களுக்கு இந்த மையங்களின் மூலம் வழங்கப்படும் என்று ரசாயனம் மற்றும் உரங்கள் செயலாளர் திரு ஆர் கே சதுர்வேதி கூறினார்.

 

இந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான வினையூக்கியாக இந்த மையங்களின் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் வழங்கும்.

 

தற்போது 43 செயல்பாட்டு மையங்கள் சிபெட்டுக்கு இருக்கும் நிலையில், பாலிமர் மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக 9 மையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652269


****************


(रिलीज़ आईडी: 1653948) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Assamese , Urdu , Bengali , Manipuri , Punjabi , Telugu