சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால், கொவிட் தடுப்பூசியை நான் முதலில் போட்டுக் கொள்வேன் : டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
13 SEP 2020 4:23PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சமூக இணையதளத்தில் தன்னை பின்தொடர்பவர்களின் கேள்விகளுக்கு இன்று பதில் அளித்தார். இதில் கொவிட் நிலவரம் உட்பட பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டன. இவற்றுக்கு அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் பதில் அளித்தார்.
கொவிட் தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கு இதுவரை தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் கொவிட் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். கொவிட் தடுப்பூசி மனிதர்களிடம் பரிசோதனை செய்வதில் முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்ட வருவதாக டாக்டர். ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மக்களுக்கு கொவிட் தடுப்பூசி போடுவது பற்றி நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் டாக்டர்.வி.கே.பால் தலைமையின் கீழ், தடுப்பூசி மேலாண்மைக்கான நிபுணர் குழு விரிவான உக்தி வகுத்து வருவதாகவும் அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். ‘‘தடுப்பூசி பாதுகாப்பு, விலை உட்பட பல விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி யாருக்கு அவசியம் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என திரு.ஹர்ஷ் வர்தன் உறுதி அளித்தார். மூத்த குடிமக்கள், அபாயமான சூழலில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் போடுவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து ஒருமனதாக முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான அச்சம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் திரு. ஹர்ஸ்வர்தன் , கொவிட் தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைபாடு ஏற்பட்டால், முதல் தடுப்பூசியை தான் மகிழ்ச்சியுடன் போட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653777
(Release ID: 1653849)
Visitor Counter : 212