நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்றத்தின் 2020-ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

Posted On: 13 SEP 2020 2:58PM by PIB Chennai

2020 செப்டம்பர் 14, திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தின் 2020-ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

நாளை (2020 செப்டம்பர் 14 திங்கட்கிழமை) தொடங்கவிருக்கும் 17-வது மக்களவையின் நான்காவது கூட்டத்தொடர் மற்றும் மாநிலங்களவையின் 252-வது கூட்டத்தொடர், 2020 அக்டோபர் 1 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 நாட்களில் 18 அமர்வுகளை இந்த கூட்டத்தொடர் காணும். (சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் வேலை நாட்களாக இருக்கும்). மழைக்கால கூட்டத் தொடரின்போது 47 பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படும் (45 மசோதாக்கள் மற்றும் 2 நிதி சார்ந்த விஷயங்கள்).

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் , கொவிட்-19 வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653765(Release ID: 1653836) Visitor Counter : 13