வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு, வளர்ந்துவரும் சூழலியல்களில் தமிழ்நாடும் ஒன்று
प्रविष्टि तिथि:
11 SEP 2020 5:36PM by PIB Chennai
ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலின் இரண்டாம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது.
மத்திய வர்த்தகம், தொழில்கள் மற்றும் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்த பட்டியலை மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.
விமான போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப்சிங் புரி, மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், பொது நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சூழ்நிலையை மேம்படுத்தவும் இந்த தரவரிசை பட்டியலை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை தயாரித்துள்ளது.
இதில் குஜராத் முதல் இடம் பிடித்துள்ள நிலையில், வளர்ந்துவரும் சூழலியல்களில் ஒன்றாக தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653368
(रिलीज़ आईडी: 1653424)
आगंतुक पटल : 318