தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் பொது பிரச்சினைகளை களைய நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: ஜி-20 கூட்டத்தில் திரு கங்க்வார்
Posted On:
11 SEP 2020 12:54PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் பொது பிரச்சினைகளை களைய நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஜி-20 உறுப்பு நாடுகளுக்கு தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் கங்க்வார் அறைகூவல் விடுத்தார்.
ஜி-20 தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மெய்நிகர் மாநாட்டில் நேற்று மாலை காணொலி காட்சி மூலம் பேசிய திரு கங்க்வார் இவ்வாறு கூறினார்.
கொவிட்-19 புதிய செயல்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், நாம் பணியாற்றும் முறையை மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பெருந்தொற்றால் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் ஊதியங்களை முறையாக வழங்குமாறு நிறுவனங்களை இந்திய அரசு ஊக்குவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தற்காலிக தங்குமிடங்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டதாகவும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1653260
(Release ID: 1653334)