பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
56 இயற்கை எரிவாயு மையங்களை திரு தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
10 SEP 2020 2:48PM by PIB Chennai
56 இயற்கை எரிவாயு மையங்களை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொள்கை சீர்திருத்தங்களின் சாதகங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு தொழில் முனைவோரை கேட்டுக் கொண்டார் அமைச்சர், எரிபொருள் சந்தைப்படுத்தல் துறையில் புதுமைகளை புகுத்துமாறு வலியுறுத்தினார்.
இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 56 இயற்கை எரிவாயு மையங்கள் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் பரவியுள்ளன.
அவை சண்டிகர், பீகார், அரியானா, குஜராத், ஜார்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்thiரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகும்.
விழாவில் பேசிய அமைச்சர், கடந்த ஆறு ஆண்டுகளில் இயற்கை எரிவாயு மையங்களின் எண்ணிக்கை 947இல் இருந்து 2,300க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652970
(Release ID: 1653093)