வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2020 1:56PM by PIB Chennai

ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலின் இரண்டாம் பதிப்பு நாளை வெளியிடப்படும். 

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், நீதி மற்றும் சட்ட அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் நாளை காலை 11 மணிக்கு இந்த பட்டியலை புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மெய்நிகர் முறையில் வெளியிடுகிறார்.

ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், விமான போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப்சிங் புரி, மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், பொது நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சூழ்நிலையை மேம்படுத்தவும் இந்த தரவரிசை பட்டியலை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை தயாரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652954
 


(வெளியீட்டு அடையாள எண்: 1653088) வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Telugu