சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 சமீபத்திய தகவல்கள்: மொத்த பாதிப்புகளில் 60% ஆறு மாநிலங்களில் பதிவாகியுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து 95,735 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
Posted On:
10 SEP 2020 11:53AM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து 95,735 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மொத்த பாதிப்புகளில் 60% ஆறு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. 23,000க்கும் அதிகமான தொற்றுகள் மகாராஷ்டிராவில் இருந்தும், பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் பதிவாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 9,19,018 ஆக உள்ளது. 74 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புகள் 9 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே 49% பாதிப்புகளுக்கு காரணமாகும்.
2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ள நிலையில், தலா 97,000 பாதிப்புகளுக்கும் அதிகமான எண்ணிக்கையை கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் கண்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 1,172 பேர் மரணமடைந்துள்ளனர். 380 மரணங்களுடன் 32 சதவீத இறப்புகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ள நிலையில், கர்நாடகாவில் 128 பேரும் தமிழ்நாட்டில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652910
(Release ID: 1653004)
Visitor Counter : 203
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam