ரெயில்வே அமைச்சகம்

தில்லிக்கு வரவிருக்கும் விவசாயிகள் ரயில்

Posted On: 09 SEP 2020 3:09PM by PIB Chennai

தென்னிந்தியாவின் முதல் மற்றும் நாட்டின் இரண்டாவது விவசாயிகள் ரயில் அனந்தப்பூர் (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் ஆதர்ஷ் நகர் (புது தில்லி) இடையே இன்று துவக்கி வைக்கப்பட்டது  

நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், திரு நரேந்திர சிங் தோமர், தென்னிந்தியாவில் இருந்து நாட்டின் தலைநகரத்துக்கு வரும் முதல் விவசாயிகள் ரயில் இதுவென்று தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்படுத்தலின் காரணமாக, கிராமத்தினருக்கும், விவசாயிகளுக்கும் உதவும் நோக்கில் விவசாயிகள ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த ரயிலை திரு தோமர் மற்றும் அந்திரப் பிரதேச முதல்வர் திரு ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர், காணொலி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தனர்.

வேளாண் பொருளாதாரத்தை வலுப்படுத்த விவசாயிகள் ரயில் உதவும் என்று திரு தோமர் தெரிவித்தார். திரு ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திரப் பிரதேசத்தின் தோட்டக்கலை பொருட்கள் நாட்டின் இதர பகுதிகளை கிசான் ரயில் மூலம் எளிதாக இனிமேல் சென்றைடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் திரு சுரேஷ் சி அங்காடி, வேளாண் பொருட்களை விரைவாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்து செல்ல கிசான் ரயில் உதவும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652611


(Release ID: 1652773)