சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டலத்தின் 73வது கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் பங்கேற்பு
Posted On:
09 SEP 2020 3:04PM by PIB Chennai
உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டலத்தின் 73வது கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் பங்கேற்றார். இணையமைச்சர் டாக்டர்.பூணம் கேத்ரபால் சிங்கும் இதில் கலந்து கொண்டார்.
கொவிட் தொற்று காரணமாக, இந்த 2 நாள் கூட்டம் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் நடக்கிறது. 73வது கூட்டத்தை தாய்லாந்து அரசு பாங்காக்கில் இருந்து நடத்துகிறது.
இந்தியா சார்பில் இந்த கூட்டத்தில் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார். கொவிட் தொற்று காரணமாக, உயிரிழந்தவர்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கையில், தங்கள் நலனை பற்றி கவலைப்படாமல் பணியாற்றிய முன்னணி பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கூட்டு முயற்சிகளால் ஏற்பட்ட முன்னேற்றத்தை சுட்டிகாட்டுவதற்கு மட்டும் அல்லாமல் மண்டல மற்றும் சர்வதேச சுகாதார விஷயங்கள் குறித்து பேசவும், இந்த மண்டல குழு அமைப்பு மிகவும் பயனளிக்கும் வகையில் இருப்பதாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.
தென்கிழக்கு ஆகிய மண்டலத்தில் 11 உறுப்பு நாடுகள், உலக மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கை கொண்டுள்ளதாகவும், இங்கு சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது, உலக சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் என டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார். ‘‘அனைவருக்குமான சுகாதாரம் என்ற நமது பொதுவான இலக்குதான், அனைவரையும் ஒற்றிணைப்பதாக’’ திரு.ஹர்ஷ் வர்தன் கூறினார்.
இந்தியாவில் தொற்று பாதிப்பிலிருந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் திரு.நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை டாக்டர்.ஹர்ஷ் வர்தன் சுட்டிக்காட்டினார்.
சுகாதார இலக்குகளை அடைய , தேசிய சுகாதார திட்டம், ஆயஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டதையும் இந்த கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் விளக்கினார்.
மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை மலிவு விலையில் வழங்க, ஜன் அசுவாதி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
போலியோ, டெட்டனஸ், தாய், சேய் இறப்பு குறைந்துள்ளதையும் மத்திய அமைச்சர் திரு.ஹர்ஸ்வர்தன் சுட்டிக் காட்டினார். டி.பி.யை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், நிணநீர் ஃபைலேரியாஸிஸ் மற்றும் கலா-அசார் போன்ற நோய்களை ஒழிக்க உறுதி பூண்டிருப்பதாகவும் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652610
(Release ID: 1652770)
Visitor Counter : 209