சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மொத்தம் 5 கோடி கொவிட் பரிசோதனைகள் மேற்கொண்டு இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
08 SEP 2020 12:27PM by PIB Chennai
கொவிட் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில், தீவிர பரிசோதனை முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒட்டு மொத்த பரிசோதனையில், இந்தியா இன்று 5 கோடியை கடந்துள்ளது.
கடந்த 2020 ஜனவரியில், புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில், ஒரே ஒரு பரிசோதனை மேற்கொண்டது முதல் இன்று 5,06,50,128 பிரசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது வரை இந்தியா மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 10,98,621 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் நாட்டின் பரிசோதனை திறன் அதிகரித்துள்ளது.
வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் தினசரி சராசரி பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 3-வது வாரத்திலிருந்து (3,26,971)செப்டம்பர் முதல் வாரம் வரை (10,46,470) பரிசோதனை 3.2 மடங்கு அதிகரித்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒரு மில்லியன் பேருக்கு 140 பரிசோதனைகள் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் சராசரி வாரந்தோறும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிப்பால், ஒரு மில்லியன் பேருக்கான பரிசோதனை அதிகரித்துள்ளது. ஒரு மில்லியன் பேருக்கான பரிசோதனை கடந்த ஜூலை 1-ஆம் தேதி 6396லிருந்து, இன்று 36,703 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள பரிசோதனை மையங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இன்று 1668 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 1035 அரசுத் துறையை சேர்ந்தது மற்றும் 633 தனியார் பரிசோதனை கூடங்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652220
****************
(रिलीज़ आईडी: 1652270)
आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati