பாதுகாப்பு அமைச்சகம்

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை

Posted On: 08 SEP 2020 10:49AM by PIB Chennai

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை.

 

ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது.

 

சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன.

 

அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652202

 

 

***************


(Release ID: 1652223) Visitor Counter : 249