புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம் முதல் உலக சூரிய சக்தி தொழில்நுட்ப மாநாட்டில் கையெழுத்திடப்படவிருக்கிறது
Posted On:
07 SEP 2020 12:24PM by PIB Chennai
சர்வதேச சூரிய சக்தி கூட்டணியால் (ISA) ஏற்பாடு செய்யப்படும் முதல் உலக சூரிய சக்தி தொழில்நுட்ப மாநாடு நாளை மாலை (8 செப்டம்பர், 4.30 மணிக்கு) தொடங்கவிருக்கிறது. 149 நாடுகளில் இருந்து 26,000-க்கும் அதிகமானோர் இந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
கட்டுபடியாகக்கூடிய, நிலையான மற்றும் தூய்மையான பசுமை எரிசக்தியின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். நவீன, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களைக் குறித்தும் இது விவாதிக்கும்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி சபையின் தலைவரும், இந்திய மின்சார மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சருமான திரு ஆர் கே சிங், சபையின் இணை தலைவரும் பிரான்சு சூழலியல் மாற்ற அமைச்சருமான திருமிகு பார்பரா பொம்பிலி, துணைத் தலைவர்கள் மற்றும் பலர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்திடப்படவிருக்கின்றன. இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒப்பந்தமும் இதில் ஒன்றாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651926
***
(Release ID: 1651968)
Visitor Counter : 250