சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட் நோயாளிகளின் குணமடைதல் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 73,642 பேர் குணமடைந்தனர்
Posted On:
06 SEP 2020 1:40PM by PIB Chennai
தொடர்ந்து இரண்டாவது நாளாக 70 ஆயிரத்துக்கும் அதிகமான கோவிட்-19 நோயாளிகள் இந்தியாவில் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,642 பேர் குணமடைந்தனர். இன்றைய நிலவரப்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்தை (31,80,865) நெருங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் குணமடைதல் விகிதம் 77.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தொற்றுடையவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651750
(Release ID: 1651828)
Visitor Counter : 182
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam