பாதுகாப்பு அமைச்சகம்

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று மாஸ்கோ கூட்டத்துக்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவரை சந்தித்தார்

Posted On: 05 SEP 2020 1:27PM by PIB Chennai

மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனக் (SCO) கூட்டத்துக்கு இடையே, சீன பாதுகாப்பு துறை அமைச்சர், ஜெனரல் வெய் பெங்கே விடுத்த வேண்டுகோளை அடுத்து, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவரை சந்தித்தார்.

இந்தியா சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இந்திய சீன உறவுகள் ஆகியவை குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

 

ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது என்று இந்த சந்திப்பின் போது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் திரு ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் எல்லை நிர்வாகத்தில் இந்தியப் படை எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையைக் கையாள்வதாகவும், நாட்டின் எல்லை மற்றும் இறையாண்மையையும் இந்திய ராணுவம் உறுதியுடன் காக்கும் என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச எல்லையில் சீனா திடீரென அதிகப்படியான படைகளைக் குவிப்பதோ, இந்திய எல்லைக்குள் நுழைய அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபடுவதோ, இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறுவதாகும் என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651529
 


(Release ID: 1651614) Visitor Counter : 276